Jun 21, 2019, 22:39 PM IST
ராகுல் காந்தியின் குசும்புத்தனமான செயல்பாடுகளால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாவது வாடிக்கையாகிவிட்டது போலும். நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் போது மொபைல் போனில் கவனம் செலுத்தி விமர்சனத்திற்கு ஆளானார். இன்றோ யோகா தினத்தைப் பற்றி கிண்டல் செய்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளதுடன் கடும் கண்டனக் குரல்களும் எழுந்து வருகிறது. Read More